‘கடலை தான் போட முடியல…சுண்டலாவது போடு….’ ரம்யா பாண்டியனுக்காக சோம் பகிர்ந்த வசனம்.!

Subscribe our YouTube Channel

பிக்பாஸ் சிசன் 4ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரைக்கும் தகுதி பெற்றவர்கள் சோம் மற்றும் ரம்யா.பிக்பாஸ் இல்லத்தில் அதிக போட்டியாளர்களின் பிடித்த நபராக விளங்கிய சோம் Ticket to finale டாஸ்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.மேலும் அறிமுகம் இல்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவர் போட்டியின் இறுதிவரை வந்தது மிகவும் பெரிய விடயம் என இரசிகர்கள் அவரைப் பாராட்டினர். Ticket to finale வில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் பிக்பாஸ் இறுதிப்போட்டி முடிவடைந்து ஆரி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் சோம் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் பிக்பாஸ் இல்ல நண்பர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதிலும் முக்கியமாக ரம்யா பாண்டியனும் அவரும் அந்த சாக்லேட்டும் இருப்பது போல கார்ட்டூன் ஒன்றையும் பின் ஒருமுறை அவர் ரம்யாவிடம் “கடலை அதான் போட முடியலை சுண்டலாவது போடு” என கூறிய அந்த வாசகம் அடங்கிய ஒரு கார்ட்டூனையும் அவர் அதில் பகிர்ந்துள்ளார்.