பரிசுப்பணமா….பொங்கல் கொண்டாட்டமா…?பரிசு தொகையுடன் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறிய நபர் இவரா…? கசிந்த தகவல்…!வீடியோ

Subscribe our YouTube Channel

இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் இல்லத்தில் இந்த வாரம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.போட்டியாளர்கள் அனைவரும் உறியடி, slow மிதிவண்டி ரேஸ் உள்ளிட்ட போட்டிகள் பொங்கல் சிறப்பாக கொண்டாடி வருவது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. மேலும் 2வது ப்ரோமோவும் சற்று முன்பு வெளிவந்துள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு பெரிய வாய்ப்பாக பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் போக வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.ஒரு லட்சத்தில் ஆரம்பித்து 5 லட்சம் மதிப்பிலான பணம் போட்டியாளர்களின் முன் வைக்கப்பட்டது.

அதனை யாராவது எடுத்து கொண்டு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டியாளர்களும் ஒருவரான கேப்ரில்லா 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் பார்வையாளர்கள். பொங்கல் பண்டிகை ஒருபுறம் இருக்க பணப்பெட்டி மறுபுறம் உள்ளது.

யாருக்கு எவ்வளவு பணம் என்பதும் யார் பணத்தை வேண்டாம் என வீட்டில் இருக்கப்போகிறார்கள் என்பதும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் நபர் இறுதி போட்டிக்கு செல்ல மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.