யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதி அசத்திய மாணவர்கள்….!

Subscribe our YouTube Channel

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. அக்கொண்டாட்டத்தில் திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது.இதுவரை நடைபெற்ற போட்டிகளைப் போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்டது.அதாவது இதில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டு திருக்குறள் எழுதி அசத்தினர்.இதில் பத்திற்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினார். இந்த திருக்குறள் எழுதும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் ஷீல்டு ஆகியவை வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட அசார், சல்மான் சகோதரர்கள் பல்வேறு யோகா சாதனைகள் மூலம் இந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.