மகாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் அமைந்துள்ளது சித்திவிநாயகர் ஆலயம். இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு நாய் ஒன்று கைகுலுக்குவதுடன் ஆசி வழங்கி வருகிறது.இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவிலில் கடவுளை தரிசித்து விட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இன்றி நாய் தனது கைகளை அன்போடு நீட்டுகின்றது.
நாயின் செயலை கண்டு வியந்து போன பக்தர்கள் அதோடு செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.