இன்று ஒருநாள் முதல்வராக பதவியேற்கும் 19 வயது மாணவி…!

Subscribe our YouTube Channel

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் முதல்வராக பதவியேற்கிறார்.இவரது தந்தை வியாபாரியாவார். தாயார் அங்கன்வாடி எனப்படும் தாய்-செய் னால மையத்தில் பணியாற்றி வருகிறார். சர்வதேச பெண்குழந்தைகள் தினமான இன்று(ஜனவரி 24) அம்மாணவி ஒருநாள் முதல்வராக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிருஷ்டி முதல்வராக செயல்படும் போது அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார். இந்த நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாணவி சிருஷ்டி கோஸ்வாமி கூறியதாவது, இந்த அறிவிப்பை இதுவரை என்னால் நம்ப முடியவில்லை.உண்மை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளேன்.அதே சமயம் மக்கள் நலத்திட்டப்பணிகளை மேற்கொள்ளும் போது இளைஞர்கள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் எனது சிறந்த பணியை ஒருநாள் முதல்வராக இருக்கும் போது வெளிப்படுத்துவேன் எனத்தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்றுவரும் சிறுவர்களுக்கான சட்டமன்றத்தில் முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவி ஒருநாள் முதல்வராக பதவியேற்கும் போது அடல் ஆயுஷ்மான் திட்டம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார் என அம்மாநில அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.