இன்றைய உங்கள் ராசி பலன்கள் 24/01/2021

இன்றைய உங்கள் ராசி பலன்கள்- 24/01/2021 முழுவதுமாக இங்கே தரப்பட்டு உள்ளது .தொடந்து படியுங்கள்.

மேஷம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 1-1-e1510005999111.png

  பொருளாதார நிலை சீராக இருக்கும். வீட்டில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து குவியும்.

ரிஷபம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 2-1-e1510006062520.png

வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.

மிதுனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is mithunam-1-e1510006161157.png

 உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து இணைவார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் தீரும்.

கடகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 4-e1510006225495.png

குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி  கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க பெரும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம்  இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு உண்டாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி கூடும்.

சிம்மம் ராசிபலன் :

This image has an empty alt attribute; its file name is 5-e1510006280808.png

உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். பெண்களால் அனுகூலப் பலன் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் அமையும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 6-e1510006337559.png

குடும்பத்தில் மருத்துவ செலவுகள் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது வேண்டும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து இருப்பார்கள்.

துலாம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 7-e1510006420532.png

குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் இருக்கும். எதிலும் நிம்மதியில்லாத நிலை இருக்கும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பது வேண்டும்.

விருச்சிகம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 8-e1510006540159-243x300.png

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு தாராளமாக அமையும். சொத்துக்கள் வாங்க விற்க அனுகூலமான இருக்கும். சேமிப்பு உயரக் கூடும்.

தனுசு ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 9-e1510006644642-231x300.png

உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும்.

மகரம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 10-e1510006745926.png

தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள்  இருக்கும். வெளி பயணங்களில் கவனம் வேண்டும். வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு அமையும். புதிய பொருட் சேர்க்கை இருக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். எதிலும் நிதானமாக இருப்பது அவசியம்.

கும்பம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 11-1-e1510006931626.png

பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் இருக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் கூடும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம் ராசிபலன்:

This image has an empty alt attribute; its file name is 12-e1510006987658.png

குடும்பத்தில் சுபசெலவுகள் இருக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து குவியும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமையும்.