அமெரிக்க அதிபராக இறுதி உரையாற்றிய ட்ரம்ப்…. உரையின் போது கண் கலங்கிய ஜோ பைடன்…!

Subscribe our YouTube Channel

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது.அதில் தோல்வியை தழுவிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பதவியில் இருந்து வெளியேறும் முன் விடைபெறுவதற்கான உரை நிகழ்த்தினார்.அதில், “நாங்கள் என்ன செய்வதற்காக வந்தோமோ அதைச் செய்தோம். அதற்கு மேலும் செய்தோம்” என கூறினார்.அதிபர் பதவியில் இருந்து விடைபெறும் வகையில் youtube ல் டிரம்ப் வெளியிட்ட உரையில், “நான் சவாலான மோதல்களை எதிர்கொண்டேன். ஏனெனில் அதற்குத்தான் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் அவர்கள் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பதவி ஏற்பதற்காக வாஷிங்டனுக்கு செல்வதற்கு முன் ஜோ பைடன், சொந்த ஊரான டெலவெயரில் உரையாற்றினார். அப்போது தமது ஐரிஷ் மூதாதையர்கள் குறித்தும், தாம் வளர்ந்த பகுதி குறித்து ஜோ பைடன் பேசினார்.உரையாற்றிக்கொண்டு இருக்கும்போதே கண்கலக்கிய ஜோ பைடன், டெலவெயர் பகுதியை சேர்ந்தவர் என்பதில் பெருமைப்படுவதாக கூறினார்.