27 மனைவிகள்….150 குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வரும் நபர்….!

Subscribe our YouTube Channel

கனடாவின் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிஃபுல் பகுதியில் வசித்து வருபவர் வின்ஸ்டன் பிளாக்மோர். இவருக்கு 27 மனைவிகள்.அத்துடன் 150 பிள்ளைகள்.கனடாவின் மிகப்பெரிய குடும்பமாக இவரது குடும்பம் கருதப்படுகிறது.இது வரை வெளியுலகுக்கு இவரது குடும்பம் பற்றி அறியப்படவில்லை. அப்படி இருக்க தற்போது அவரது 19 வயது மகனான மெர்லின் பிளாக்மோர் தனது குடும்பத்தினர் தொடர்பான சுவாரஸ்ய கருத்துக்களை tiktok வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.எனினும் அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அத்தோடு தங்களின் சொந்த அம்மாவை ஆங்கிலத்தில் “mum” என்றும் அப்பாவின் பிற மனைவியர்களை “Mother” என அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தனது தந்தையின் 27 மனைவிகளில் 22 பேருக்கு மட்டுமே அவருடன் குழந்தைகள் இருப்பதாகவும் மெர்லின் பிளாக்மோர் தெரிவித்துள்ளார். பிற சகோதர, சகோதரிகளை போல நாங்கள் சண்டையிட்டுக் கொள்வதில்லை.

மாறாக நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பாசமாக வளர்ந்து வருவதாகவும் அந்த காணெனியில் கூறியுள்ளார்.இதை அனைத்தையும் விட மிகுந்த சுவாரஸ்யமான தகவலாக தனது அப்பா வின்ஸ்டன் பிளாக்மோர் திருமணம் செய்த 27 பெண்களில், அக்கா – தங்கைகள் ஜோடி மட்டும் 4 இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த 3 சகோதரிகளையும் தனது தந்தை திருமணம் செய்துள்ளார்.

இதை விட ஒருபடி மேலாக, ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்ததாகவும் அவர்கள் 12 பேருக்குமே “M” என ஆங்கிலத்தில் தொடங்கும் வார்த்தையில் தான் பெயர் வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.பெரிய குடும்பம் என்பதால் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே தோட்டம் அமைத்து அறுவடை செய்வதாகவும், விவசாய நிலங்களில் அனைவரும் ஒன்றுக்கூடி வேலை செய்வோமெனவும் தெரிவித்துள்ளார். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள் என அவர் கூறியுள்ளார்.