அர்ச்சனாவின் சகோதரிக்கு நடைபெற்ற சீமந்தம்…. ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்… வீடியோ

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து குடித்தது.இதில் போட்டியாளராக பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பங்கேற்றவர் அர்ச்சனா.பிக்பாஸ் இல்லத்தினுள் இவர் தனக்கென ஒரு அணியினரை உருவாக்கி இருந்தார்.அதற்கு ஏனைய போட்டியாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.பிக்பாஸ் இல்லத்தில் இருந்து 77 வது நாளில் வெளியேற்றப்பட்ட அவர் தான் தானாகவே இந்த விளையாட்டை விளையாடியதாக விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு சீமந்தம் நடைபெற்றுள்ளது.

அந்நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் சீசன் 4 பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்நிகழ்ச்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் அனிதா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.

https://www.instagram.com/p/CLtSC0QBIpX/?utm_source=ig_web_copy_link

அங்கு நிஷா மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான தீபாவுடன் அனிதாவின் கணவர் இணைந்து நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அனிதா வெளியிட்டுள்ளார்.அதற்கு ‘அனிதா சம்பத் கணவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.