படுக்கையில் இருந்து கட்டிலுக்கு அடியில் இழுத்து செல்லப்பட்ட குழந்தை….திகில் வீடியோ

Subscribe our YouTube Channel

சிறுமி ஒருவர் படுக்கையில் தூங்கிக்கொண்டு இருக்கும் பொழுது ஓர் அமானுஷ்ய சக்தியினால் இழுக்கப்படுவது போன்றதொரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.குறித்த வீடியோவினை சிறுமியின் தந்தை தனது TikTokகில் பதிவேற்றம் செய்துள்ளார்.இந்த சம்பவம் கடந்த 21ம் திகதி நள்ளிரவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுமி தனது பொம்மைகளுடன் விளையாடும் படுக்கையின் முடிவில் படுத்திருந்த போது நடந்தது. படுக்கையில் இருந்து எழுந்த சிறுமி ‘அம்மா’ என பல முறை கூச்சலிடும்போது அதன் அடியில் ஊர்ந்து செல்கிறார். அவர் அலறும்போது ​​சிறுமியின் கால்கள் மறைந்து போய் படுக்கையின் கீழ் மெதுவாக இழுக்கப்படுவது போல் தெரிகிறது.

இந்த திகிலூட்டும் காட்சிகளைப் பார்த்த பிறகு சிறுமி ஏதோவொன்றால் இழுக்கப்பட்டாள் என பெற்றோர்கள் உறுதியாக நம்புகிறார்கள். தந்தையால் TikTok கில் @joshdean0222 என்ற ஐடியில் தந்தையால் பகிரப்பட்டுள்ளது.

என் மகள் படுக்கைக்கு அடியில் இழுக்கப்படுகிறாள்… அவர் ஊர்ந்து சென்றதாக மனைவி நினைக்கிறாள். ஆனால் அவள் ஏதோவொன்றால் இழுக்கப்பட்டாள் என சிறுமியின் தந்தையால் கேப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோவை இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமானோரால் பறிக்கப்பட்டுள்ளது.