தந்தை ஆகப்போகும் பிக்பாஸ் பிரபலம்…. மனைவியுடன் வெளியிட்ட உருக்கமான பதிவு…!

Subscribe our YouTube Channel

பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளர்களாக பங்கேற்றவர் மகத்.இவர் தமிழில் மங்காத்தா,ஜில்லா,வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்.சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவர் மொடல் அழகியான பிராச்சி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் முன் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் மேகத்தின் நெருங்கிய நண்பரான சிம்பு,இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மகத் தனது மனைவியுடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் இன்று திருமண நாள் கொண்டாடும் மகத் மற்றும் பிரச்சி தம்பதியினர் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மகத்பகிர்ந்த செய்தியில் “நாங்கள் இருவரும் ஒரு அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் புதுவரவு இருக்கும். நன்றி பிராச்சி மிஸ்ரா இந்த சிறந்த பரிசுக்காக, love you என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவை பிராச்சியும் பகிர்ந்து உள்ளார்.

மேலும் தனது மனைவிக்கு அன்புடன் முத்தமிடும் புகைப்படத்தையும் மகத் தனது இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். அவரது இரசிகர் உள்ளிட்ட பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.