சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ஹரிநாடர்… ஜோடியாகும் வனிதா விஜயகுமார்…!வீடியோ

Subscribe our YouTube Channel

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா பிகாசில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.அத்துடன் தனது பெயரில் YouTube சேனல் ஒன்றினை நடத்தி வரும் வனிதா அதில் சமையல் சம்பந்தமான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.இருப்பினும் அவர்களது உறவு நீடிக்காத நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக வனிதாவே அறிவித்திருந்தார்.அதனை தொடர்ந்து நடிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார் வனிதா.

ஆதம் தாசன் இயக்கத்தில் ஹீரோயினை மையப்படுத்திய அனல் காற்று என்ற படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது நடமாடும் நகைக்கடையாக வலம்வரும் ஹரிநாடர் என்பவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் வனிதா.அத்திரைப்படத்துக்கு 2k அழகானது காதல் எனப்பெயரிடப்பட்டுள்ளது.

முத்தமிழ் வர்மா என்பவர் இயக்கம் இத்திரைப்படத்தின் பூஜை சென்னை வடபழனியில் உள்ள AVM ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் RP சௌத்ரி வனிதா,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனிதா கொரோனாவுக்குப் பின் படங்கள் ஆரம்பிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரையுலகின் ஜாம்பவான் ஆர்.பி.சவுத்ரியை நீண்ட வருடத்துக்குப் பின் சந்தித்தது என் அப்பா, அம்மாவை பார்த்தது போல் இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெள்ளித்திரையில் சில படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த கதைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு நடிக்கிறேன். இந்தப் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதம் அருமையாக இருந்தது எனக்கூறியுள்ளார்.இது குறித்து கருது கூறிய ஹரிநாடர் இந்த படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் முத்தமிழ் வர்மா அவர்கள் கதையைக் கூறினார்.

இந்த படத்தின் கதைப்படி நீங்கள் நடித்தால்தான் இந்த கதை இன்றைய தலைமுறைக்கு சென்று சேரும் என அவர் கூறினார். எனவே நான் இந்த கதையை கேட்டு எனக்கு கதை பிடித்துப் போனதால் நான் நடிப்பதற்கு சம்மதத்தோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரிப்பதற்கும் நான் முன் வந்துள்ளேன் என கூறியுள்ளார்.