காட்டில் திருமண நாளைக் கொண்டாடும் பிக்பாஸ் பிரபலம்… மனைவிக்கு அவர் கூறிய வாழ்த்து….வாழ்த்திய பிரபலங்கள்…!

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜ்.பிக்பாஸ் இல்லத்தில் பிக்பாஸ் விளையாட்டில் காட்டிய ஈடுபாட்டை விட பெண்களை கட்டிப்பிடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டியவர், குரூப்பிஸம் இல்லை என கூறிக்கொண்டே அன்பு குரூப்பில் இருந்தவர் போன்ற விமர்சனங்களுக்கு உள்ளானார் அத்துடன் கட்டிப்பிடி வைத்தியர், கோமாளி,குட்டி சினேகன் உள்ளிட்ட பட்டப்பெயர்களை கொண்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அழைத்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸுக்கு பின் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த ரியோ காட்டுக்குள் போக இருப்பதை கூறியிருந்தார்.

பின் அவருக்கு கமல் அவர்கள் டென்ட்டை பரிசாக வழங்கினார். தொடர்ந்து அவர் சொன்னது போன்றே தனது மனைவி மற்றும் மக்களுடன் காட்டில் இருக்கும் புகட்டடங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். இந்நிலையில் அவர்களின் திருமண நாளான இன்று தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் நான் மிகவும் சார்ந்த நபர் தான்.. நீ என் வாழ்க்கையை அழகாக்குகிறாய்.. உன்னை வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என நான் உறுதியளிக்கிறேன் .திருமண நாள் வாழ்த்துகள். I Love You So Much என பதிவிட்டுள்ளார் இவருக்கு பிக்பாஸ் சீசன் 4ன் சக போட்டியாளர்களாக ரம்யா பாண்டியன், சம்யுக்தா,கேப்ரில்லா உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.