ஜெர்மனி வாழ் இலங்கை பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட நடிகர்…!பிரதமரிடம் புகார் அளித்த பெண்…!

Subscribe our YouTube Channel

தமிழ் திரையுலகில் கடந்த 2005ம் ஆண்டு விஷ்னுவர்தன் இயக்கத்தில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்யா.அதனை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜெர்மனி வாழ் இலங்கை பெண்ணிடம் சுமார் 80 லட்சம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் வசித்து வருபவர் இலங்கை பெண்ணான விட்ஜா.இவர் அந்நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.இவர் தன்னை நடிகர் ஆர்யா ஏமாற்றி விட்டதாக பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு ஒன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.

அத்துடன் ஆர்யாவின் தாயாருக்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதங்கள் மற்றும் பணபரிவர்தனைகள் குறித்த உரையாடல்களையும் புகாருடன் இணைத்துள்ளார்.இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது ” நான் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறையில் பணி புரிகிறேன். கொரோனா வைரஸ் லொக்டவுன் காரணமாக தனக்கு கைவசம் படங்கள் இல்லை.

இதனால், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார்.அத்துடன் நான் உன்னை விரும்புகிறேன்.திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் எனக்கூறினார்.அதன் பின் என்னிடம் பணம் வாங்கினார்.சில மாதங்களின் பின் என்னை போல் பல பெண்கள் ஆர்யாவினால் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.இதனால் ஆர்யாவை நான் திட்டினேன் எனக் கூறியுள்ளார்.மேலும் இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் தலையிட்டதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இப்போது, ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால், தற்கொலை செய்து கொள்ள போவதாக என்னை மிரட்டுகிறார்.அவர் எப்படி நாடகம் போட்டாலும் நான் என் புகாரை வாபஸ் பெறப் போவதில்லை. கடந்த சில வருடங்களாக நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை. எனக்கு நீதியும் வேண்டும். இந்த விஷயத்தில் அக்கறை காட்டியதற்காக பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அத்தோடு உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் ஜா தமிழ்நாடு முதலமைச்சர் தனிபிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல் ராஜ் ஐ.ஏ.எஸ் – க்கு எனது புகாரை அனுப்பியுள்ளார்.

விரைவில் , தமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க விட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் தனக்கு பெண் தேடும் படலத்தை ஆர்யா நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக இதுவரை ஆர்யாவிடம் இருந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.