வீட்டு வேலைகளை தனி ஆளாக கவனித்து கொண்ட மனைவி…. இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு….!

Subscribe our YouTube Channel

சீனாவில் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அதாவது வீட்டில் அதிக பொறுப்புக்களை சுமந்த கணவன் அல்லது மனைவிக்கு அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற இச்சட்டம் உதவும்.அந்த வகையில் பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்குக்கு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதாவது திருமணமான 5 ஆண்டுகளில் குழந்தைகளை கவனித்து கொண்டது,விட்டு வேலைகளை செய்தது போன்றவற்றை மனைவி தனி ஆளாக செய்துள்ளார்.ஆனால் கணவர் அலுவலகத்துக்கு செல்வதை மட்டுமே வேலையாக கொண்டிருந்துள்ளார்.

இதனால் விவாகரத்து பெற்ற மனைவி இழப்பீடு தேவை என நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த பெய்ஜிங் நீதிமன்றம் மனைவிக்கு 50,000 யுவான் இழப்பீடு, குழந்தையை கவனித்து கொண்டதற்கு 2000 யுவான் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.