Subscribe our YouTube Channel
அவற்றுக்கெல்லாம் எழுத்தாளரும் பொறுமையுடன் பதிலளித்தார். ஒரு கட்டத்தில் இந்த படத்தின் முடிவு பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவர், எப்படி ஒரு கொலை இன்னொரு கொலைக்கு தீர்வாகும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தீர்வாகும் எழுத்தாளர் பாரதி நாதன்,சட்ட ரீதியாக முயற்சி செய்து பார்த்துவிட்டு அது முடியாது என்ற பட்சத்தில் தான் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். போராட்டம் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டமாகவும் அரசியல் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாகும் மாற்றுவது தான் கம்யூனிசம் என எழுத்தாளர் பாரதி நாதன் கூறினார்.எழுத்தாளர் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவரிடம் இருந்து மைக்கை பறித்தார் பரியேறும் பெருமாள் திரைப்பட நடிகர் மாரிமுத்து.
அந்த தருணத்தில் அங்கு எழுந்து வந்த இயக்குனர் வெற்றிமாறன் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி அதையெல்லாம் நீங்கள் சொல்லாதீர்கள் என கூறிவிட்டு அங்கிருந்து கோபமாக சென்றார்.இதனால் சங்கத்தமிழன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.