காலையில் தடல்புடலாக நடந்து முடிந்த திருமணம்…. மாலையில் உயிரிழந்த மணமகன் ..!

Subscribe our YouTube Channel

இராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி.தற்காலிகமாக திருச்சியில் உள்ள சமயபுரத்தில் கோணலையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இவருக்கு 27 வயதில் விக்னேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.இவருக்கு சாயல்குடியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதன் அடிப்படையில் நேற்று முன் தினம் சாயல்குடியில் உள்ள கோயில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் வீட்டுக்கு சென்ற மணமக்களுக்கு அவர்களின் சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்பட்டு விருந்து நடைபெற்றது.

இந்நிலையில் திடீரென மணமகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.மார்பில் கைவைத்தபடி மயங்கி விழுந்த விக்னேஸ்வரனை அருகில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணமகன் உயிரிழந்தார்.இந்த சம்பவம் இருவீட்டாரிடையே பெரும் சாக்கடை ஏற்படுத்தியுள்ளது.