திரைப்பட காட்சிகளை மிஞ்சிய திருட்டு…!மருத்துவரின் வீட்டில் திருட சுமார் 90 லட்சத்தில் சொந்தமாக வீடு வாங்கிய கொள்ளையர்கள்…!

Subscribe our YouTube Channel

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வைசாலி நகரை சேர்ந்தவர் சுனித் சோனி.மருத்துவரான இவர் முடி மாற்று சிகிச்சை மையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் சுனித் சோனி தன்னுடைய வீட்டில் இருந்த பெரும் தொகையிலான வெள்ளியை அருகில் உள்ள வீட்டின் உரிமையலர் சுரங்கம் தோண்டி கொள்ளையடித்து விட்டனர் என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.புகாரின் அடிப்படையில் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது மருத்துவர் சோனி கடந்த பிப்ரவரி 24ம் திகதி அன்று தனது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள தரை சமம் இல்லாமல் இருந்ததை கண்டுள்ளார். அப்போது அது ஒரு சுரங்கம் என அவருக்கு தெரிய வந்துள்ளது.

அத்துடன் காவல்துறையினரின் விசாரணையில் சோனிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர் மூலமாக தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கும் என நம்பினர். ஏனெனில் சோனிக்கு மட்டுமே அவர் வீட்டின் தரைத்தளத்தில் வெள்ளியை பெரிய பெட்டியில் வைத்திருந்தது தெரியும்.மருத்துவர் சோனியின் வீட்டுக்கு அருகில் இருந்த வீட்டை சில மாதங்களுக்கு முன்னதாக 90 லட்ச ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கிய திருடர்கள், அந்த இடத்தை பார்க்க முடியாதவாறு திரையிட்டு மறைத்துள்ளனர்.

அங்கிருந்து மருத்துவர் சோனியின் வீடு வரை 20 அடி நீளம், 15 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டியுள்ளனர். இதன் வழியாக வந்து தான் பெட்டியில் இருந்த வெள்ளியை கொள்ளையடித்துள்ளனர். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளியின் மதிப்பு மற்றும் எடை குறித்து மருத்துவர் தகவல் கூறவில்லை.அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் அஜய் லம்பா கூறியதாவது இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளோம்.

அவர் ஒரு வர்த்தகர்.அவரின் பிற 4 கூட்டாளிகளை தேடி வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம் என தெரிவித்தார். அத்துடன் மருத்துவர் சோனியின் வீட்டில் 3 பெட்டிகள் இருந்துள்ளன. ஒரு பெட்டியில் வெள்ளி இருந்துள்ளதாக கூறுகிறார்.மற்ற இரண்டு பெட்டிகளும் காலியாக உள்ளன. அவற்றில் ஏதும் இருந்ததா என்பதே தெரியவில்லை. அது குறித்தும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.