மேலும் 6 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு… ஒப்புதல் வழங்கிய இங்கிலாந்து பாராளுமன்றம்…!

Subscribe our YouTube Channel

இங்கிலாந்தில் கொரோனா பரவல் காரணமாக அவசரகால நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் வரை அ வசரகால அ திகாரங்களை நீட்டிப்பதற்கு ஆதரவாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒப்புதல் அளித்தது.மேலும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தையும் அவர்கள் அங்கீகரித்தனர்.ஆயினும் போரிஸ் ஜான்சனுக்கு தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அவர்கள் இந்த முடிவால் கிடைக்கும் நன்மைகளைவிட, நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் மனித செலவுகள் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.

கடந்த ஒரு வருடங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகளின் அடிப்படையில் நாட்டில் ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்யவும், வணிகங்களை மூடவும், பயணத்தைக் கட்டுப்படுத்தவும் வைரசால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.