மறுமணம் செய்து கொண்ட முன்னாள் மனைவிக்கு வாழ்த்து கூறிய அமேசான் தலைமை செயல் அதிகாரி….!

Subscribe our YouTube Channel

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் கடந்த 1993ம் ஆண்டு மெக்கன்ஸி ஸ்காட் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.திருமணம் நடந்து அடுத்த அந்த இருவரும் இணைந்து அமேசான் நிறுவனத்தை ஆரம்பித்தனர். அமேசான் நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்தில் அதன் முதல் ஊழியர் குழுவில் மெக்கன்ஸியும் ஒருவராக இருந்தார். இருப்பினும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் அதாவது கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.அப்போது விவாகரத்துக்காக அமேசான் பங்குகளில் 25% அளவை ஜெஃப் பெசோஸ், மெக்கன்ஸிக்கு அளித்தார். இதன் மூலம் ஒரே நாளில் 2019ல் உலகின் 21வது பெரும் பணக்காரராகவும், உலகின் பணக்கார பெண்மணிகளில் 3 வதாகவும் மெக்கன்ஸி மாறினார்.

இந்நிலையில் அமேசான் தலைமை செயல் அதிகாரியின் முன்னாள் மனைவியான மெக்கன்ஸி சீயாட்டிலைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான டான் ஜூவெட் என்பவரை தற்போது மறுமணம் செய்துள்ளார். Giving Pledge என்ற அமைப்புக்கு எழுதிக்கொடுத்த உறுதிப்பத்திரம் வாயிலாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து தெரிவித்த டான் ஜூவெட் மகிழ்ச்சியான தற்செயலான ஒரு நிகழ்வில், எனக்கு மிகவும் தெரிந்த தாராளமான மற்றும் கனிவான ஒருவரை நான் திருமணம் செய்து கொண்டேன்.

மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக மகத்தான நிதியை அளிக்கும் உறுதிப்பாட்டில் மெக்கன்ஸியுடன் இணைகிறேன் என கூறியுள்ளார்.முன்னாள் மனைவியின் மருமணத்துக்கு அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் டான் சிறந்த மனிதர்.இருவரும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது என ஜெஃப் பெசோஸ் கூறியதாக அமேசான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.