தொப்பையை குறைக்க மிக எளிமையான வீட்டு மருத்துவம்..!

Subscribe our YouTube Channel

வளர்ந்து வரும் நவீன வாழ்க்கை முறைகளால் பலருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஒட்டிக் கொள்கிறது. உடலுக்கு தேவையான பயிற்சிகள் இல்லாத காரணத்தினால் பலரும் தொப்பை ஏற்பட்டு கடும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக மனஅழுத்தங்களுக்கும் உட்படுகின்றனர். அதேபோல ஏற்பட்ட தொப்பையை குறைக்க பலரும் பல்வேறு வழிகளில் முயன்றும் வருகின்றனர்.நாம் உட்கொள்ளும் உணவு முறையிலேயே தொப்பையை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி அறியலாம். அதாவது சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம். கடுகு எண்ணெய் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்கும்.

உணவில் பூண்டை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால் தேவையற்ற கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கிறது.ஒவ்வொரு வேளை உணவு உண்டபின்னும் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்து கொண்டாலும் நல்ல பலனை பெற முடியும்.தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது செரிமான மண்டலத்திற்கு மிக சிறந்தது.

கீரைகள் கூட உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் அற்புதமான உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.அத்துடன் கறிவேப்பிலையை காலையில் தினமும் வெறும்வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை நீக்கும்.முட்டைகோஸில் நீர்ச்சத்து அதிகம்.இதனை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.