நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் மண்டேலா படக்குழுவினர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்….!வீடியோ

Subscribe our YouTube Channel

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மண்டேலா.விமர்சன ரீதியாக பலரின் கவனத்தை ஈர்த்துள்ள இத்திரைப்படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில் இத்திரைப்படத்தில் முடிதிருத்துவோரை இத்திரைப்படத்தில் கிண்டல் செய்திருப்பதாக நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் படக்குழுவினர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எங்கள் தொழிலை செய்பவர்கள் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.