நான் யாரையும் ஏமாற்றவில்லை….கதறி அழுத தர்ஷா குப்தா…. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட ஜேசன் சாமுவேல்…! வீடியோ

Subscribe our YouTube Channel

சின்னத்திரை நடிகைகள் நிறுவனங்களை ப்ரோமோஷன் செய்வதற்காக பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.அதற்கு ஏற்றாற்போல கடந்த சில நாட்களுக்கு முன் தர்ஷா குப்தா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார்.அதில் நான் யாருடைய பணத்தையும் ஏமாற்றவில்லை, எனனிடம் சிலர் தங்களுடைய புடவை, கம்மல் போன்றவற்றை விளம்பரம் செய்ய சொல்லி கேட்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் நேரத்தில் என்னால் ஆனால், வீடியோ போட முடியாது என்பதால் நான் என் விருப்பத்திற்கு தான் வீடியோ போடுவேன்.

அதனால் நான் பணம் வாங்காமல் இலவசமாக தான் செய்து கொடுத்தேன். உண்மை தெரியாமல் யாரை அசிங்கமாக பேசாதீர்கள் என கண்ணீருடன் கூறியிருந்தார்.பொருட்களை விளம்பரம் செய்வதாக குறியும் இலவசமாக பொருட்களை வாங்கிவிட்டு பல ஆயிரக்கணக்கான பணத்தை பெற்றுவிட்டு விளம்பரத்தை செய்யாமல் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு சமூக வலைத்தளங்களில் தர்ஷாவை நெட்டிசன்கள் பலரும் திட்டித்தீர்த்து வந்தனர்.இதற்கு பதிலளிக்கும் விதமாகவே தர்ஷா குறித்த விடிவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஜேசன் சாமுவேல் என்பவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் வீடியோக்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் வைரலாகியும் வருகிறது.அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களில் பிரபலங்களுக்கு சம்பந்தப்பட்ட பிராண்டுகளில் இருந்து அனுப்பிய குறுந்தகவல்கள், விளம்பரம் செய்து தருவதாக அவர்கள் அனுப்பிய இன்வாய்ஸ் என அனைத்தையும் ஸ்கிரீன் சோர்ட் எடுத்து தனது சமுக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அவர் தற்போது தர்ஷா குப்தாவின் மேனஜர் அனுப்பிய குறுந்தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டுக்கு 30ஆயிரமும் போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்கு 40 ஆயிரமும் ஒரு நிமிடம் வீடியோ போட 50 ஆயிரமும் தர்ஷா குப்தா வாங்குவதாக 50 வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவை தொடர்ந்து பல பிரபலங்களும் ப்ரோமோஷன் செய்வதர்க்காக பல மாதங்களுக்கு முன் வாங்கிய பணங்களை திருப்பி கொடுத்துள்ளனர்.இதுவரை பி ராண்டுகளுக்கு 4,50,000 ரூபாய் அப்படித் திருப்பித் த ரப்பட்டுள்ளது.அதற்கான ஆ தாரங்களையும் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.