தோல்வியை தழுவிய சிஎஸ்கே அணி….கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்…!

Subscribe our YouTube Channel

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் .இத்தொடரின் நடப்பு சம்பியனை எதிர்கொண்ட ஆர்சிபி அபார வெற்றியை பெற்றது.இருப்பினும் நேற்றைய இரண்டாவது போட்டியில் இளம் கேப்டன் ரிஷப் பந்த்தின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மோதிய சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்களையும் விளையாடி 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் பார்ட்னர்ஷிப்பில் 138 ரன்களை குவித்தனர்.

போட்டியை தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் ஆடும் அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் எதிரணிக்கு நெருக்கடியை அளித்திருக்கலாம். ஆனால் தங்களது அணி ரன்களை குவிக்க தவறிவிட்டதாக கூறியிருந்தார்.இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மெதுவாக பந்து வீசியதாக எம்எஸ் தோனிக்கு 12 லட்சம் ரூபாயை ஐபிஎல் நிர்வாகம் அபராதமாக விதித்துள்ளது.

இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மும்பையில் ஏப்ரல் 10ம் திகதி நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விடக் கூடுதலாக பந்துவீச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துக்கொண்டது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது.