வறண்ட நிலப்பரப்பை சோலையாக மாற்றிய 70 வயது முதியவர்….!

Subscribe our YouTube Channel

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள புர்கினா பாசோ நாட்டை சேர்ந்தவர் Yacouba Sawadogo.சுமார் 70 வயதாகும் இவர் பாலைவனமாக மாறிய தனது நிலத்தை சோலைவனமாக மாற்றியுள்ளார்.இவரது நிலப்பரப்பில் பருவமழை பொய்த்து போனதால் நிலம் வறண்ட நிலப்பரப்பாக மாறியுள்ளது. இதனால் என்ன செய்வதென ஜோசித்த அவர் பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றி ZAI Holes என்ற நுட்பத்தை கடைபிடித்து வறண்ட பூமிக்குள் விதைகளை முளைக்கச் செய்துள்ளார். சுமார் 40 ஆண்டு காலம் இதற்கென விடாமுயற்சியுடன் அவர் உழைத்துள்ளார்.

அதன் பலனாக 62 ஏக்கர் பரப்பளவு கொண்ட வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றியுள்ளார். தற்போது அந்த தொ ழில்நுட்பத்தை பலருக்கும் பரிச்சயம் செய்து வருகிறார்.1970 மற்றும் 80 வாக்கில் தனக்கு அக்கம் பக்கம் வசித்த மக்கள் எல்லாம் வறட்சி காரணமாக ஊரை காலி செய்து புறப்பட்டு சென்ற நிலையில் தனியொரு ஆளாக நின்று அந்த பகுதியை வனமாக மாற்றியுள்ளார் அவர்.

இதன் மூலம் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் உணவு பாதுகாப்பு, நிலத்தடி நீர் மட்டம் பல்லுயிர் பெருக்கமும் அதிகரித்து வருவதாக கடந்த 2018ல் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.