மோசடி சர்ச்சையில் சிக்கிய விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள்…. ஆதாரத்துடன் வெளியிட்ட ஜேசன் சாமுவேல்…!வீடியோ

Subscribe our YouTube Channel

சமூக வலைதலைப்பக்கங்களில் புரொமோஷன் செய்வதற்காக நிறுவனங்களிடம் குறிப்பிடடதோகையை சின்னத்திரை பிரபலங்கள் பெற்றுக்கொள்கின்றனர் என்ற தகவல் சமீபகாலமாகவே பரவி வருகிறது.சமூக வலைத்தளங்களில் அதிக பின்தொடர்வோரை கொண்ட பிரபலங்கள் தங்களை அணுகும் நிறுவனங்களிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு அவர்களது இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதலைப்பக்கங்களில் புரொமோஷன் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா பணம் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டதாக அவரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வந்தனர்.

இதனை கவனித்த தர்ஷா குப்தா தான் யாரையும் பணம் வாங்கி ஏமாற்றவில்லை என கண்ணீர் மல்க வீடியோவினை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் ஆர்.ஜே ராகவி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பத்மபிரியா, ஜாக்குலின் என செலிபிரிட்டிகள் பலரும் பொருள்களுக்கு விளம்பரம் செய்து தருவதாகப் பொருளையும் பணத்தையும் பெற்றுக் கொண்டு தங்களை ஏமாற்றிவிட்டதாகப் பல தொழில் முனைவோர்கள் புலம்பி வருகின்றனர்.

இது தொடர்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஜேசன் சாமுவேல் என்பவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் வீடியோக்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் வைரலாகியும் வருகிறது.அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களில் பிரபலங்களுக்கு சம்பந்தப்பட்ட பிராண்டுகளில் இருந்து அனுப்பிய குறுந்தகவல்கள்,விளம்பரம் செய்து தருவதாக அவர்கள் அனுப்பிய இன்வாய்ஸ் என அனைத்தையும் ஸ்கிரீன் சோர்ட் எடுத்து தனது சமுக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து கூறியுள்ள ஜேசன் சாமுவேல் நான் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன். பொருள்கள் டிசைன் செய்யும் நிறுவனம் ஒன்றை வைத்திருக்கிறேன். சாஃப்ட்வேர் எம்.எம்.சியின் சி.ஓ.ஓ ஆகவும் இருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் பணிகளையும் செய்து வருகிறேன். ஸ்டார்ட் அப் வைத்திருப்பவர்களின் பிரச்னையாக அவர்கள் கூறியது, `இன்ஸ்டாகிராமில் இன்ஃப்ளுயென்சர்களாக இருக்கும் பல பிரபலங்களிடம் எங்களுடைய பிராண்டை புரொமோட் செய்து தருமாறு கேட்டோம்.

அதற்குரிய பணத்தையும் பொருளையும் கொடுத்தோம். ஆனால் பொருள்களை வாங்கி ஒரு வருடத்துக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அந்தப் பொருளை விளம்பரம் செய்யவில்லை. குறுந்தகவல்களை படித்துவிட்டு பதிலும் தரவில்லை. இதிலிருந்து எப்படி மீள்வது என என்னிடம் ஆலோசனைகள் கேட்டார்கள். முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் இவர்களை இதிலிருந்து மீட்டெடுக்க நினைத்தேன்.சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரிடமிருந்து தகுந்த ஆதாரங்களைப் பெற்று எந்தெந்தப் பிரபலங்கள் என பெயரைச் சொல்லி ஏப்ரல் 1ம் திகதி இன்ஸ்டாகிராமில் முதல் live வீடியோவை பதிவிட்டேன்.

நான் பதிவிட்டிருந்த வீடியோவின் கீழ் பிரபலங்கள் தங்களையும் ஏமாற்றியதாகக் கூறி நிறைய தொழில் முனைவோர்கள் கமென்ட் செய்திருந்தனர்.பலரும் எனக்கு ஆதரவு கொடுத்து தங்களிடம் இருந்த ஆதாரங்களையும் கொடுத்தார்கள்.அதனால் நான் அடுத்தடுத்த வீடியோக்களை பதிவிட்டேன். அதன் விளைவாக பிரபலங்கள் சிலரிடமிருந்து நிறைய மிரட்டல்கள் வந்தன.

https://www.instagram.com/tv/CNNrD9UlT_L/?utm_source=ig_web_copy_link

சிலர் நான் புகழுக்காக இப்படிச் செய்வதாக வீடியோக்களும் பதிவிட்டார்கள். என்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டையும் ரிப்போர்ட் பண்ணி பிளாக் பண்ண பார்த்தனர்.புகழை வைத்து நான் என்ன பண்ணப் போகிறேன். ஒரு பிசினஸ் பண்ணுவது ஈஸியான விஷயம் இல்லை. பிசினஸ் செய்வதால் எனக்கு அந்தக் கஷ்டம் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.