சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய கேரள மருத்துவ மாணவர்களின் நடனம்….. வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்… வீடியோ

Subscribe our YouTube Channel

கேரள மாநிலத்தின் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு பயின்று வருபவர் நவீன் கே ரசாக்.அதே கல்லுரியில் 3ம் ஆண்டு பயின்று வருபவர் ஜானகி ஓம்குமார். இவர்கள் இருவரும் இணைந்து ‘ரஸ்புடின் ‘பாடலுக்கு கல்லூரியில் உற்சாக நடனம் ஆதி அதனை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அவர்கள் வெளியிட்ட வீடியோ வேகமாக வைரலானதுடன் அவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்தன. கொரோனா சூழலில் மருத்துவர்களும், மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களும் தொடர்ச்சியாக மன அழுத்தத்தில் பணிபுரியும் சூழலில் இவர்களின் நடன வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். அதே சமயம் இவர்களின் வீடியோ பதிவுக்கு சில எதிர்ப்பு குரல்களும் வலுக்க தொடங்கின.

அந்த வகையில் கருத்து பதிவிட்ட பாஜக வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் ஜானகி ஓம்குமார் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருடன் நடனம் ஆடும் நவீன் கே ரசாக் இஸ்லாமியர் என்பதாலும் “ஜானகியின் பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். இதில் ஏதோ தவறு இருக்கிறது. நவீன் கே ரசாக் ஒரு இஸ்லாமியர். ஜானகி தந்தைக்காகவும் அவரின் மனைவிக்காகவும் வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கும் நிமிஷாவின் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என கடந்த 8ம் திகதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுபோன்ற பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் பாஜகவினரின் கருத்துக்களை கண்டிக்கும் விதமாக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பலர் #ResistHate ஹேஷ்டேக்கில் இதே பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ’வெறுப்பது உங்கள் திட்டம் எனில் அதை எதிர்ப்பது எங்கள் முடிவு என (If the intention is hate, then the decision is to resist) என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து பேசிய மாணவர் நவீன் கே ரசாக் சமீபத்தில் நடன இயக்குநர் வனேசா சகோ இன்ஸ்டாகிராம் வீடியோவில் ரஸ்புடின் பாணியில் நடனம் ஆடினார். அதில், ஈர்க்கப்பட்டு நாங்களும் ரஸ்புடின் பாடலுக்கு நடனமாட முடிவுசெய்து பயிற்சி எடுத்து வகுப்பு முடிந்தவுடன் நடனமாடி வீடியோ எடுத்தோம். அடுத்ததாக வேறொரு பாடலுக்கும் நடனமாடி வீடியோ வெளியிடவுள்ளோம்.

https://www.instagram.com/p/CMxAI3Ogbd5/?utm_source=ig_web_copy_link

அந்த வீடியோவும் எதிர்பார்ப்புகளுக்கு குறைவில்லாதது. நாங்கள் புதிய தலைமுறையினர். இதுபோன்ற வகுப்புவாத கருத்துகள் குறித்து கவலைக்கொள்ளவில்லை எனக்கூறியுள்ளார்.மேலும் இது குறித்து கருது கூறியுள்ள ஜானகி ஓம்கார் இது போன்ற கீழ்த்தனமான பேச்சையெல்லாம் கண்டு நான் கவலை கொள்ளவில்லை எனக்கூறியுள்ளார்.