தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் பிரபலம்… வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ …!

Subscribe our YouTube Channel

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,கன்னடம் என இந்தியாவின் பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி.அனைத்து மொழிகளிலும் மக்களின் பெரும் வரவேற்பை இந்நிகழ்ச்சி பெற்றுள்ளது.இந்நிலையில் கன்னட மொழியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா.இவருக்கும் தொழிலதிபரான நாகார்ஜுனன் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகை சைத்ரா வீட்டில் இருந்த பெனாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவரது தற்கொலை முயற்றிக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் நடிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணமாகி மாதம் ஒன்றாகியும் இன்னும் இருவரும் ஒன்றாக வாழவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சைத்ராவின் வாக்குமூலத்தை வாங்கிய பின்னரே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தற்கொலை முயற்சிக்கு முன் சைத்ரா வீடியோ ஒன்றினையும் பதிவு செய்து வைத்துள்ளார்.அதில் அவரது கணவரிடம் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது,எங்களுடைய வாழ்க்கையில் பலர் விளையாடி விட்டனர்.

நான் உங்களை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.அது எவ்வளவு பெரிய முட்டாள் தானம் என்பதை இப்போது நான் உணர்கிறேன்.என் வாழ்க்கையே போய்விட்டது.இதுவரை உங்களுடைய வருமானம் பற்றி எதாவது நான் இதுவரை கேட்டிருக்கின்றேனா.?உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பது பற்றியெல்லாம் நான் உங்களிடம் கேட்டதே கிடையாது.உங்களை ரொம்ப love பண்ணிணேன்.

திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன்.நம்முடைய உறவில் நீங்கள் சீரியசாக இல்லை என்றால் எதுக்காக என்னுடைய உறவில் தொடர்ந்திற்கள்..எதற்காக பொய்யன் வாக்குறுதிகளை கொடுத்தீர்கள்.? என அந்த வீடியோவை அவர் கண்ணீருடன் பதிவு செய்துள்ளார்.