தடுப்பு சுவரின் மீது மோதி உயிருக்கு போராடிய ஓட்டுநர்… சரியான முதலுதவி அளித்து ஓட்டுனரை காப்பாற்றிய காவலர்கள்…! வீடியோ

Subscribe our YouTube Channel

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த கேரளா மகேந்திரா பிக்கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஓட்டுநர் அபிலாஷ் சுயநினைவை இழந்து உயிருக்கு போராடியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த நீலகிரி மாவட்ட கியூபிரிவு ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் மரைக்காயர் ஆகியோர் மயக்கநிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அபிலாஷுக்கு CPR எனப்படும் மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மீட்கும் முதலுதவியை செய்துள்ளனர்.

இதனால் சில நிமிடங்களிலேயே அபிலாஷ் கண்விழித்துள்ளார். தொடர்ந்து அபிலாஷ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சரியான நேரத்தில் ஓட்டுனரின் உயிரைக் காப்பற்றிய கியூபிரிவு ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் மரைக்காயர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.