உணவே மருந்து… முளைகட்டிய தானியங்களின் பயன்கள்…!

Subscribe our YouTube Channel

உணவே மருந்து என கூறி வாழ்ந்து காட்டியவர்கள் நம் முன்னோர்கள். நாம் உட்கொள்ளும் உணவே அனைத்து ஆரோக்கியத்திற்கு அடிப்படை. குறிப்பிடட சில காலங்களுக்குள் நவநாகரிக வளர்ச்சியால் பலரும் நம் பாரம்பரியம் மருவி போயுள்ளது.இதனை கட்டிக்காக்கும் முயற்சியில் பல இயற்கை ஆர்வலர்களும் செயல்பட்டு வருகின்றனர். உடலின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணியாக விளங்குவது தானியங்கள்.அவற்றிலும் முளைகட்டிய தானியங்களை உணவாக எடுத்துக் கொள்ளும் போது அவற்றின் பயன்கள் ஏராளம்.அவை தெரிந்தால் யாரும் அதனை தவற விட மாட்டார்கள்.சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் தேவையான சத்துக்கள் முளைகட்டிய தானியங்களில் கிடைக்கின்றன.

எவ்வாறு முளைக்கட்ட வேண்டும். நன்றாக கழுவியதும் இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வேண்டும்.பின் நீரை வடித்து ஊறிய தானியங்களை பருத்தி துணியில் தளர்வாக கட்டித்தொங்க விட வேண்டும். ஒரு நாளுக்கு 2,3 தடவைகள் நிறை தெளித்து ஈரப்பத்தில் வைத்திருக்க வேண்டும்.அடுத்து சுமார் 6லிருந்து 8 மணிநேரத்துக்கும் முளை வெளிவரத் தொடங்கி விடும்.

தானியங்கள் முளைக்கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் தானியங்களை முளைக்கட்டும் போது அவற்றின் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகரிக்கிறது.விட்டமின் A ன் அளவு இரட்டிப்பாகிறது.முளைக்கட்டுவதனால் உயிர்ச்சத்து கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது. ரைபோஃபிளேவின், நயாசின், கோலின் மற்றும் பையோட்டின் அளவுகள் அதிகரிக்கப்படுகிறது. மாவுச்சத்தானது சர்க்கரைப் பொருட்களாக மாற்றப்படுகிறது.

பயறுகளில் நச்சுத்தன்மை உண்டாக்கும் பொருட்களையும், நல்ல ஊட்டத்திற்கு எதிராக செயல்படும் காரணிகளையும் குறைக்கிறது.திட்ட உணவில், உணவு வகைகளை அதிகரிக்கலாம். ஏனெனில், முளைக்க வைக்கப்பட்ட பயறுகளை, சாலட் மற்றும் பச்சடி போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம்.இயங்காத நிலையில் உள்ள நொதிகளை செயல் புரிய வைத்து, சீரணித்தலும் நன்கு நடைபெற்று, உடலிற்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.

கூட்டு நிலையில் இருக்கும் கால்சியம் (Calcium), துத்தநாகம், இரும்புச்சத்து (Iron) போன்ற தாது வெளியிடப்படுகின்றன. முளை கட்டப்பட்ட பயறுகளை சமைக்காமல் உண்ணலாம். ஏனெனில், முளை கட்டுதலினால் பயற்றின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.பச்சை மரக்கறிகள் மற்றும் பலன்களை விட அதிக சத்துக்கள் இந்த முளைகட்டிய தானியங்களில் அடங்கியுள்ளன. இந்நேரத்தில் சாப்பிடலாம்.முளைகட்டிய தானியங்களை காலை உதவுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக நல்லது.வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

இத்தானியன்களை மட்டும் சாப்பிடும் போது உடலுக்கு தேவையான அனைத்து பெரும்பாலான சத்துக்கள் இருப்பினும் கார்போஹைட்ரேட்,மினரல்ஸ் போன்ற சத்துக்களும் தேவை. ஆகையால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சேருமாறு பார்த்துக் கொள்தல் அவசியம்.எனவே நம் அன்றாட உடையில் முளைகட்டிய தானியங்களையும் சேர்த்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இன்புற வாழ்வோம்.