பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோ…. கிண்டல் செய்த YouTubers…அர்ச்சனா வைத்த ஆப்பு…!வீடியோ

Subscribe our YouTube Channel

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலரது விமர்சனங்களையும் பெற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மக்கள் சாராவுடன் இணைந்து youtube சேனலில் ஆர்வம் காட்டி வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட குளியலறை வீடியோ இணையத்தில் வைரலானதுடன் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.இதற்கு காரணமாக பிரபலமானவர்களை பயன்படுத்தி youtube சேனல் ஆரம்பித்து பெரும் வணிகத்தை நடத்தி வருகின்றன பல கார்ப்பரேட் நிறுவனங்கள்.

மறுபுறம் திறமைகளை மட்டும் மூல தனமாக வைத்து ஒவ்வொரு சப்ஸ்கிரைபர்களையும் சம்பாதிக்கும் சோலோ கிரியேட்டர்கள். எப்போதும் இவ்விரு தரப்புக்கும் மோதல் தான்.ஏனையோரை விட கார்ப்பரேட்டுகளின் திட்டப்படி பிரபலங்கள் ஆரம்பிக்கும் சேனல்கள் வெகு விரைவிலே வளர்ச்சி அடைந்து விடுகின்றன. இதனால் பிரபலங்கள் தங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் அர்ச்சனா அவர்கள் வெளியிட்ட bathroom tour வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவை சிலர் ஏனைய youtube சேனல்காரர்கள் கிண்டல் செய்து வெளியிட்டிருந்தனர்.அத்துடன் அர்ச்சனாவின் குடும்பத்தினரையும் விட்டு வைக்காது அனைவரையும் கிண்டல் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.இந்நிலையில் அப்படியான வீடியோக்களை செய்தவர்களுக்கு ‘காப்பிரைட் வயலேஷன் ஸ்ட்ரைக்’ (எச்சரிக்கை) youtubeலிருந்து வந்துளைத்து.

எவ்வளவு பெரிய சேனலாக இருந்தாலும் 3 முறை இந்த காப்பிரைட் வயலேஷன் ஸ்ட்ரைக்கைப் பெற்றுவிட்டால் அது அந்த சேனலையே முடக்கிவிடும். இந்த காப்பிரைட் ஸ்ட்ரைக் அர்ச்சனா தரப்பிலிருந்து வந்ததாகப் பல youtube சேனல்கள் குற்றம் சாட்டுகின்றன.இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் அர்ச்சனா விளக்கமும் அளித்துள்ளார்.