இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்ட உருக்கமான பதிவு… செம வைரல்…!

Subscribe our YouTube Channel

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களும் ஒருவராக வலம்வருபவர் டி.இமான்.இவர் தனது சமூக வலைதளபாகத்தில் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் இன்று (மே 25) என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவரின் பிறந்த நாளைக்கு (மே 23) பிறகு இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23ம் திகதி என் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது . அவர் கோமா நிலையில் இருந்தார். மருத்துவமனை ஐ.சி.யு-வில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் முன்பு ஒரு கேக்கை வெட்டினேன்.

எம் இருவருக்குமே தெரியாது அம்மாவை வாழ்த்தும் கடைசி நாள் அது என்பது.அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு விரைவில் விடு திரும்புவார் என பலமான நம்பிக்கை இருந்தது. ஆனால் மே 25ம் திகதி 2008ம் ஆண்டு உண்மை விட்டு சொர்க்கத்துக்கு சென்று விட்டார்.

நான் உங்களை இழந்த இன்னல் வரை என் வாழ்க்கையில் நீங்கள் அறியாத எண்ணற்ற நிகழ்வுகள் நடந்து விட்டன. அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா.உங்கள் ஒரே குழந்தை என பதிவினை நிறைவு செய்துள்ளார்.இமானின் இந்த உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.