கொரோனா தேவி புகைப்படத்துடன் வனிதாவை ஒப்பீடு செய்த நெட்டிசன்கள்… ஆத்திரமடைந்த வனிதா செய்த செயல்…!

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் வனிதா விஜயகுமார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பீட்டர் பாலுடனான திருமணம் குறித்த சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் தற்போது திரையில் நடிப்பது மற்றும் youtube சேனலில் சமையல் வீடியோக்களை பதிவிடுவது என ஆர்வம் காட்டி வருகிறார் வனிதா.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகமாக பரவி பல உயிர்களை காவுவாங்கி வருகிறது. இதனால் தமிகளத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் உள்ளவர்கள் கொரோனா தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கொரோனா தேவி சிலை, வனிதா விஜயக்குமார் போன்று இருப்பதாகக் கூறி இரு படத்தையும் இணைத்து அதை வனிதாவுக்கு டேக் செய்தும் வந்தனர் நெட்டிசன்கள். இதைப் பார்த்த வனிதா விஜயக்குமார் எல்லோரும் ஏன் இதை எனக்கே ஷேர் செய்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார் வனிதா.