கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி…. வீட்டுக்குள் அனுமதி மறுத்த மகள் &மருமகன்….!வீடியோ

Subscribe our YouTube Channel

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரை குடும்பத்தினர் வீட்டுக்குள் அனுமதிக்காத கொடூர சம்பவம் ஈரோட்டில் நடந்தேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மக்கள் உள்ளனர்.மூவருக்கும் திருமணமான நிலையில் கணவர் இல்லாத நிலையில் அதே பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மகள் மற்றும் மருமகன் அனுமதி க்கவில்லை.இந்த தகவல் காவல்துறையினருக்கு செல்லவே மகள் மற்றும் மருமகனுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதனால் ஒரு இரவு மட்டும் வீட்டில் தங்க மூதாட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.தொடர்ந்து மறுநாள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.