ஆரம்பத்தில் கொரோனா குருமா என அசால்ட்டாக இருந்தேன்…. கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பதாக நடிகர் சென்ராயன் வெளியிட்ட வீடியோ

Subscribe our YouTube Channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சென்ராயன். பிக்பாஸுக்கு பின் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் இது பற்றி கூறிய சென்ராயன், மக்களே.. வணக்கம் மக்களே.. உண்மையிலேயே நடிக்கல ஆவி புடிச்சிட்டு இருக்கிறேன்.

வாழ்க்கையில் நான் அனைத்தையுமே பாசிட்டிவ் ஆக தான் எடுத்துக்கொள்வேன். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், சினிமாவில் ஜெயிக்க வேண்டும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நான் பாசிட்டிவ் ஆக தான் பார்ப்பேன். இப்போ எனக்கே கொரோனா பாசிட்டிவ் ஆகி போச்சு.ஆரம்பத்தில் கொரோனா குருமா என ரொம்ப அசால்ட்டா ரொம்ப கேர்லெஸ் ஆக இருந்தேன். என்னையே இப்போது தாக்க ஆரம்பித்து விட்டது. அதனால் மக்களே careful ஆக இருங்கள்.

https://www.instagram.com/p/COvX-KzD1j1/?utm_source=ig_web_copy_link

நான் தற்போது என்னுடைய வீட்டில் அறையில் தனிமைப் படுத்திக்கொண்டு இருக்கிறேன். மனைவி குழந்தை பக்கத்து அறையில் பத்திரமாக இருக்கிறார்கள். மனைவி மட்டும் அவ்வப்போது வந்து உணவு கொடுத்துவிட்டு செல்வார். கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் பெலோ. அதனால் எச்சரிக்கையாக இருங்கள் எனக்கூறியுள்ளார்.