கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் தாக்கும் ‘மியூகோர்மைகோசிஸ்’ எனும் கறுப்பு பூஞ்சை நோய்…. மருத்துவர்களின் விளக்கம்..!

Subscribe our YouTube Channel

கொரோனா நோய்த்தொற்றானது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்தியாவில் 2வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.இது இவ்வாறிருக்க கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டவர்களுக்கும் குணமடைந்து வருவோருக்கு மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் செய்தியளர்களுக்கு பேட்டியளித்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அவர்கள்,கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 52 பேர் கருப்பு பூஞ்சை தொற்றிற்குப் பலியாகியுள்ளனர்.

மாநிலத்தில் 1500 பேருக்குக் கறுப்பு பூஞ்சை தொற்று நோய் இருந்த நிலையில் அது இந்த 2வது அலையில் வேகமாகப் பரவுகிறது. கொரோனா முதல் அலையின் போது இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் வெகு சிலரே உயிரிழந்திருந்தனர். ஆனால் 2வது அலையில் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதன் அறிகுறிகளாக மருத்துவர்கள் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, நாசியில் பிரச்சினை உள்ளிட்டவை முன்வைக்கப்படுகின்றன.

மேலும் மூக்கு, கண்கள் வழியாகப் பரவும் இந்த தொற்று நோய் நேரடியாக மூளையைப் பாதிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் மகாராஷ்டிராவில் ஏற்கனவே கறுப்பு பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 8 நோ யாளிகள் தங்களது ஒரு கண் பா ர்வையை இழந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அ ளிப்பதற்காக ஒரு லட்சம் ஆ ம்போடெரிசின்-பி ம ருந்தை வா ங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.