கொரோனாவினால் உயிரிழந்த நபர்…. ஆற்றில் வீசிய உறவினர்கள்…!வீடியோ

Subscribe our YouTube Channel

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அத்துடன் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் மணிலா அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் ஆயிரக்கணக்கனோரின் சடலங்கள் கங்கை ஆறில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனாவால் இறந்த நோ யாளியின் உடல் ஆ ற்றில் வீசப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் ஓடும் ராப்தி ஆற்றின் பாலத்தின் மீது, கொரோனா பாதுகாப்பு கவசம் அணிந்த இருவர், கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை சுமந்து வந்துள்ளனர். தொடர்ந்து அந்த சடலத் தை தூக்கி ஆற்றில் வீசியுள்ளனர்.இந்த சம்பவத்தை அந்த வழியாக வந்த ஒருவரால் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் ஆற்றில் வீசப்பட்ட சடலம் பல்ராம்பூர் மாவட்ட மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு அதனை உறவினர்களே ஆறில் வீசியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்த பட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.