கொரோனா சிகிச்சைக்கு மாட்டு சாணத்தை பயன்படுத்த வேண்டாம்…இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை…!

Subscribe our YouTube Channel

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை தீவிரமாக பரவிவரும் சூழலில் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என சமூக வலைத்தளங்களில் சில போலியான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சம்பவம் தான் மாட்டுச்சாண சிகிச்சை. இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கொரோனாவுக்கு எதிர்ப்பு மருந்தாக மாட்டு சனம் மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாரத்துக்கு ஒருமுறை மாட்டின் சனத்தினை உடல்முழுவதும் பூசி சிகிச்சை பெற்று வந்தால் உடலில் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகும் என நம்பப்படுகிறது.இதுவரை எவ்வித அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்படாத இதுபோன்ற ஆபத்தான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பாக இந்திய மருத்துவ நிபுணர்கள் கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய செயலர் மருத்துவர் ஜெ.எ.ஜெயலால் கூறியுள்ளதாவது மாட்டுச்சாணத்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வேறு பல மொய்களுக்கு வழிவகுக்கும்.கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியினை மாட்டுச்சாணம் கொண்டிருக்கிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.இந்த செயல்பாடானது முழுக்கமுழுக்க நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது.

இவற்றை உடலில் பூசிக்கொள்வதாலோ அல்லது உட்கொள்வதாலோ உடலில் அபாயகரமான விஷயங்கள் நடைபெற வாய்ப்புக்கள் அதிகம்.இதனால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவவும் வாய்ப்புகள் அதிகம்.ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மருத்துவமனையில் உரிய சிகிச்சையினை பெறவேண்டும். கொரோனாவை தடுப்பூசியினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.