கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு நடிகர்களான சூரி & ஹரிஷ் கல்யாண்..!வீடியோ

Subscribe our YouTube Channel

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 24 ம் திகதி முதல் ஒருவாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் கடந்த ஜனவரி 16ம் திகதி முதல் தீவிரமாக நடைபெறு வருகிறது. பொதுமக்கள் உட்பட திரைத்துறை பிரபலங்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி மதுரையில் உள்ள தடுப்பூசி முகாமுக்கு சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கருது பதிவிட்டுள்ள நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் இன்னைக்கு நானும் என் மனைவியும் பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசுப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்தப் பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும்போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என பதிவிட்டுள்ளார்.

திரைப் பிரபலங்கள் பலரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சூழலில் நகைச்சுவை நடிகர் சூரி தடுப்பூசி முகாமுக்கு சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பிக்பாஸ் சீசன் 1 பிரபலம் ஹரிஷ் கல்யாண் அவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CPGPpAbBPqO/?utm_source=ig_web_copy_link

அதில் அவர் கூறியுள்ளதாவது என் முதல் கோவிட் தடுப்பூசி டோசை செலுத்திக்கொண்டேன்! யாரும் தயங்காதீர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள், முகக்கவசங்களை அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். இந்த தொற்று சங்கிலியை நாம் உடைக்கலாம். #TogetherWeCan.” என பதிவிட்டுள்ளார்.