இந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு அனுமதி இல்லை…. பயணத் தடையை நீடித்த ஐரோப்பிய நாடு…!

Subscribe our YouTube Channel

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 2ம் அலை பரவி வருவதுடன் ஆக்சிஜன் தட்டுப்படும் நிலவி வருகிறது.இதனால் உயிரிழப்புக்கள் அதிகமாகியுள்ளது.இருப்பினும் தளர்விலா ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சற்றே குறைந்து வருகிறது.இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இந்தியர்கள் இத்தாலிக்குள் நுழைய தடை விதித்திருந்தது. இத்தடையானது நேற்று (திங்கட்கிழமை) யுடன் முடிவடைந்துள்ளது.

ஆயினும் தற்போது வரை இந்தியாவில் கொரோனா பரவல் இருப்பதால் ஜூன் 21ம் திகதி வரை இத்தடையை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வங்காளதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கும் ஜூன் 21ம்திகதி வரை இத்தாலி அரசு பயணத்தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.