விடாமுயற்சி… இருப்பிடத்துக்கு இட்லியை கொண்டு செல்ல பாடாய்ப்பட்ட எலி… வீடியோ

Subscribe our YouTube Channel

ஊரடங்கு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி கிடக்கின்றன. இந்நிலையில் சாலையோரம் வீசப்பட்ட இட்லியை தனக்கு உணவாக்கி கொள்ள நினைத்த எலியின் தன்னம்பிக்கை நிறைந்த விடாமுயற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் சாலையோரத்தில் இருந்த பொந்து வழியாக வெளியே வந்த எலி ஒன்று அங்கிருந்த இட்லியை கண்டது.அதனை தனது இருப்பிடத்துக்கு எடுத்து செல்ல நினைத்தது.ஆனால் பொந்தின் வழியாக இட்லி உள்நுழையவில்லை.

இருப்பினும் தனது சின்ன வாயால் இட்லியை கவ்வியபடி பொந்தின் வழியாக செல்ல முயற்சித்தது.பலமுறை தோல்விக்கு பின் ஒருவழியாக பொந்தினுள் நுழைந்த இட்லியை தனது இருப்பிடத்துக்கு எடுத்து சென்றது அந்த தன்னம்பிக்கை குறையாத எலி.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே பலரும் எலியின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டு வருகின்றனர்.