உள்துறை அமைச்சரை காணவில்லை…. காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்…!

Subscribe our YouTube Channel

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன்காரணமாகவும் அதிக அளவில் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலை நாட்டில் இருக்கும் போது காலையில் இந்தியாவை காணவில்லை என நாளிதழ் ஒன்று செய்தி வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என டெல்லி காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கொரோனா 2வது வேகமெடுத்து கொண்டிருக்கும் சமயத்தில் உள்துறை அமைச்சரை காணவில்லை. அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் மறைய கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.