கணவரிடம் இருந்து பிஸிக்கல்,மெண்டல் பிரச்சனைகள் தொடர்ந்தால் நம்பிக்கையானவர்களை அணுகுங்கள்… பிரபல தொகுப்பாளினி அறிவுரை…!

Subscribe our YouTube Channel

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் ரம்யா.திரையில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.பிட்னெஸ் தொடர்பான வீடியோக்களை தனது youtube சேனலில் வீடியோக்களை பதிவேற்றம் செய்தும் வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடினர்.அப்போது இரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது ரசிகை ஒருவர் தன்னுடைய கணவர் அடிப்பதாகவும், அதனால் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால், மிகவும் எமோஷ்னல் ஆன ரம்யா, ரசிகையின் பதிவு மிகவும் வருத்தமாக இருப்பதாக ஆறுதல் கூறியுள்ளார்.அத்துடன் பிசிக்கல் மற்றும் மென்டல் அப்யூஸ்கள் இருந்தால் மனதுக்குள் வைத்துக் கொள்ளாமல் தங்களுக்கு நம்பகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது போன்ற பிசிக்கல் மற்றும் மெண்டல் பலவந்தங்கள் நிறையவே நடக்கின்றன.உங்களுக்காக நிறையவே வருந்துகிறேன். பணிச்சுமை இருந்தாலோ பிசிக்கல் மற்றும் மெண்டல் தாக்குதல்கள் சீண்டல்கள் இருந்தாலோ தனிமையாக ஃபீல் பண்ணினாலோ உங்களுக்கு நம்பிக்கையானவர்களை அணுகுங்கள். தயவுசெய்து உங்களுக்குள்ளேயே வெச்சுக்காதீங்க என கூறியுள்ளார்.