‘மாஸ்டர் செஃப்’ சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள நடிகர் விஜய் சேதுபதி…!வீடியோ

Subscribe our YouTube Channel

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.இவருக்கென உலகம் முழுவதும் தனி இரசிகர் கூட்டமே உள்ளது எனலாம். இந்நிலையில் உலக அளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.இந்நிகழ்ச்சியை sun தொலைக்காட்சி ஒளிபரப்படவுள்ளது.இந்தியாவில் இந்நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப் இந்தியா’ என்னும் பெயரில் தயாராகவுள்ளது.

உலக அளவில் பிரபலமான இந்நிகழ்ச்சியை இந்தியாவில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக தகவலால் வெளியாகியுள்ளன. இதனால் இந்நிகழ்ச்சிக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.ஏற்கனவே சமையலும் காமெடியும் கலந்து ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.