முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டு அகற்றம்….! வீடியோ

Subscribe our YouTube Channel

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று இலங்கை இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு பல தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இறுதிக்கட்ட போரின்போது படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை தினமாக மே மாதம் 18ம் திகதி அனுட்டிக்கப்பட்டு வருகிறது.படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் வளாகத்தில் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் நினைவேந்தல் வளாகத்தினுள் நினைவு நடுகைகல் பல்வேறு மதத்தலைவர்களால் கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து மதத் தலைவர்களுடன் இலங்கை இராணுவத்தினர் முரண்பட்டுள்ளனர்.இரவோடு இரவாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதி முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளது.அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இருக்கும் பகுதிக்குள் யாரையும் இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இரவோடு இரவாக அப்பகுதியில் குவிக்கப்பட்ட இராணுவத்தினர் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த நினைவுத்தூபி ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் நடுகைக்காக கொண்டு செல்லப்பட்ட நடுகைக்கல் களவாடப்பட்டுள்ளது.

சுமார் 2000கிலோவுக்கு அதிகமான எடைகொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட நினைவுத்தூபியை சூழ இராணுவத்தினரின் காலனி அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.