கவிஞர் வைரமுத்துவை பின்தொடரும் Me Too புகார்…விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்…ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவிப்பு…!

Subscribe our YouTube Channel

கடந்த சில ஆண்டுகளாக பாடகி சிம்மயி உள்ளிட்ட சில பெண்களால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் கவிஞர் வைரமுத்து.ஆனாலும் வைரமுத்துவின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்த வருடம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விருத்தியை பெறுவதற்காக தாம் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து தனது Twitter பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் பாடகி சிம்மயி,நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் வைரமுத்துவுக்கு குறித்த விருது வழங்கப்படுவது குறித்து அதிருப்தி வெளியிட்டு இருந்தனர்.இது குறித்து தனது Twitter பதிவில் ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர்.

ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. அவரது சிறந்த பணியால் எங்களது இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது என நடிகை பார்வதி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு குறித்த விருது வழங்கப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது.பெரும்பாலும் இந்த விருது வைரமுத்துவுக்கு வழங்கப்படமாட்டாது என பேசப்படுகிறது.