பிரபல தொகுப்பாளினிக்கு வந்த ஆபாச குறுந்தகவல்கள்… கணவர் வெளியிட்ட தகவல்…!

Subscribe our YouTube Channel

தொகுப்பாளினியாக வலம்வருபவர் அஞ்சனா.இவரது கணவரான நடிகர் சந்திரன் தனது Twitter பக்கத்தில் மனைவிக்கு வந்த ஆபாச குறுந்தகவல்கள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,இந்த பெருந்தொற்று நேரத்தில் தமிழ்நாடு காவல் துறையின் உதவியை நாடினேன். + 91 96557 12265 என்கிற இந்த எண்ணில் இருந்து தொடர்ந்து தவறான துன்புறுத்தும் வகையிலான வக்கிரமான குறுந்தகவல்கள் வருகின்றன.என் மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு இப்படியான மெசேஜ்கள் வருகிறது.

இந்நபர் மீது ஏற்கனவே சென்னை கமிஷனர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் உள்ளது எனபதிவிட்டுள்ளார்.இதனை ரி-ட்வீட் செய்த விஜே அஞ்சனா, “சில வருடங்களுக்கு முன்னர் இதே பிரச்சினையை எதிர்கொண்டேன். அந்த பிரச்சனை சைபர் குற்றவியல் பிரிவின் உதவியுடன் தீர்க்கப்பட்டது.

இதேபோலான ஒரு பிரச்சனை தொடர்ந்து என்னை தொந்தரவு செய்கிறது. என்னை இயங்கவிடாமல் செய்யும் இப்படியான ஏராளமான மோசமான மெசேஜ்களை நான் பெறுகிறேன், ஆனால் இப்போது வந்திருக்கும் இந்த மெசேஜ்கள் அச்சுறுத்துகின்றன என பதிவிட்டுள்ளார்.