வெளியிட்டது ஒரே ஒரு செல்ஃபி தான்….நடிகர் மனோபாலாவை பதற வைத்த நெட்டிசன்ஸ்… விளக்கமளித்த நடிகர் மனோபாலா…!

Subscribe our YouTube Channel

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான நகைச்சுவை மனோபாலாதனது Twitter பக்கத்தில் வெளியிட்ட செல்ஃபி புகைப்படத்தில் சர்ச்சை எழுந்தது.அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் நகைச்சுவை நடிகர் மனோபாலா. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை வாய்ந்தவர் மனோபாலா. தமிழில் இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடனும் நகைச்சுவை வேடங்களில் மனோபாலா நடித்துள்ளார்.இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர்.

இந்நிலையில் தனது Twitter பக்கத்தில் படுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கருதி என்ன சார் ஆச்சு, கொரோனாவா?, உடல்நிலையை பார்த்துகொள்ளுங்கள் என கமெண்டில் பதிவிட்டுள்ளார். இதனை கவனித்த மனோபாலா அவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் என் அன்பு மக்களே…நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்.. ஒண்ணுமில்லை… அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..என பதிவிட்டுள்ளார்.