கொரோனா…. பிபிஇ ஆடைகளை மறுவிற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட நபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Subscribe our YouTube Channel

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தளர்வில்லா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் கொரோனா நோயாளிகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செலிலியர், கொரோனா நோயாளிகள் ஆகியோர் அணியும் பிபிஇ உடையை மறுவிற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உடையானது ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஆனால் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ கழிவுகளை அகற்றும் நிறுவன ஊழியர்கள் சிலர் மறுவிற்பனை செய்வதற்காக பிபிஇ உடைகளை சலவை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில் சலவை செய்யப்பட்டு விற்பனைக்கு தயாரான நிலையில் பிபிஇ உடைகள் இருப்பது பதிவாகியுள்ளது.சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.